தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம்.

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம்.

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத்தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரணம் தவிர்ந்த ஏனைய தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாளை 03 ஞாயிற்றுக்கிழமை முதல் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக பொலிஸார் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சகல தனியர் கல்வி நிலையங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது குறித்த தீர்மானம் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு கடிதம் நகரசபை தலைவரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net