ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவன் உயிரிழப்பா?

ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவன் உயிரிழப்பா?

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய, ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசார் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரையில் பல்வேறு தாக்குதல்களை ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்தி இருக்கிறது.

இந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக மசூத் அசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவன் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக மசூத் அசாரின் மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய உளவுத்துறை அமைப்புகளும் மசூத் அசார் இறந்து விட்டானா என்பதை அறிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1476 Mukadu · All rights reserved · designed by Speed IT net