யாழ்ப்பாணத்தில் அண்டர்கிரவுண்டு பதுங்கு குழி!

யாழ்ப்பாணத்தில் அண்டர்கிரவுண்டு பதுங்கு குழி!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (Underground) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இந்தத் தேடுதலின் போதே வீடொன்றுக்குள் அமைக்கப்படிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது.

பங்கர் வடிவிலான இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டுள்ளது. அதனைக் கண்டறியாதவாறும் சீமெந்திலான கொங்கிரீட் போடப்பட்டுள்ளது. அதற்குள்ளிலிருந்து எவையும் மீட்கப்படவில்லை.

“அந்த வீட்டில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த நிலக்கீழ் பாதை அமைந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் தற்போது இல்லை. அவர் இறந்துவிட்டார். அவருடைய உறவினர்களும் இங்கு இல்லை.

தமிழ் – முஸ்லிம் குடும்பங்களால் இணைந்து அந்த வீடு பராமரிக்கப்படுகிறது” என்று அது தொடர்பில் விவரம் அறிந்தவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

Copyright © 9630 Mukadu · All rights reserved · designed by Speed IT net