யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன்!

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம்.

யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில் தரம் 2இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இச்சகோதரர்களில், குறித்த மாணவனின் உயிரிழப்புக்கு முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனை அறிக்கை கிடைத்ததால் தான் காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு குறித்த சகோதரர்கள் சுமார் 17 நாள்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே 7 வயது மாணவன் உயிரிழந்தார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net