தலவாக்கலையில் தீ : 24 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசம்!

தலவாக்கலையில் தீ : 24 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசம்!

தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால், 24 குடும்பங்ளைச் சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் நேற்றிரவு (29) 10.30 மணியளவில் திடீரெனத் தீ பரவியதாகவும், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகரசபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லயனில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்த வேளையில், மின் ஒழுக்கு ஏற்பட்டு தீ பரவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லயன் குயிருப்பில் வசித்து வந்த21 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் ஹொலிரூட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net