இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்!

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்!

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“முஸ்லிம் அமைச்சர்களுக்கு இனவாதிகளிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நேற்று நாங்கள், இன்று நீங்கள், நாளை வேறு ஒருவர். இந்த தருணத்தில் நாம் முஸ்லிம் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம்.

இதேபோல நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் சிந்திக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net