விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கிற்குள் இல்லையென வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கான செயற்பாடுகள் வடக்கில் காணப்படுவதாக தெற்கிலுள்ள சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் வடக்கில் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.