மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை.

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில தனியார் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை வகுப்புக்களை நடத்துவதாகவும் இதனால் தூர இடங்களிலிருந்து வரும் பெண் பிள்ளைகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கலை கலாசாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனியார் கல்வி நிலையப் பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.