மூதூரில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு

மூதூரில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு

கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இற்றைவரை மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளனர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மூதூர் பிரதேசத்தில் மாடுகள் அதிகளவில் உயிரிழப்பதற்கு மேய்ச்சல் தரை பிரச்சினை மற்றும் புளுத்தாக்கம் என்பன முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர் காலத்தில் இந்த மாடுகளின் இறப்பு வீதத்தை தடுக்க வேண்டுமாக இருந்தால் இவ்விரண்டு பிரச்சினைக்குமான நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லாவிடில் மூதூர், தோப்பூர், சம்பூர் பகுதிகளில் எதிர் காலத்தில் மாடு வளர்ப்பானது கேள்விக் குறியாக மாறும் அபாயம் உள்ளதெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் இறந்து கிடக்கும் மாடுகளால் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய அம் மாடுகளை மூதூர் பிரதேச சபையின் பெக்கோ இயந்திரம், ஊழியர்களையும் கொண்டு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net