மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி!

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி!

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17ஆவது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வருகிற 30ஆம் திகதி (வியாழக்கிழமை) இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கிறார்.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் நடைபெற்று வந்தது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, வரும் 29ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து மும்பை செல்லும் ரஜினி, அங்கிருந்து பதவியேற்பு விழாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் முடிவு அறிவிப்புகள் வெளியான போது, ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8093 Mukadu · All rights reserved · designed by Speed IT net