பொலிஸார் இருவர் படுகொலை! மற்றுமொரு முன்னாள் போராளி கைது!

பொலிஸார் இருவர் படுகொலை! மற்றுமொரு முன்னாள் போராளி கைது!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகாலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸ் சோதனை சாவடியில் பணியிலிருந்த பொலிஸார் இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் முன்னாள் போராளிகள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 9780 Mukadu · All rights reserved · designed by Speed IT net