//anjeng போரை தொடர இந்தியா விரும்பவில்லை! | Mukadu

போரை தொடர இந்தியா விரும்பவில்லை!

போரை தொடர இந்தியா விரும்பவில்லை!

இந்தியா தற்போதுள்ள சூழ்நிலையில் போரை தொடருவதற்கு விரும்பவில்லையென வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் நிகழ்வுகள் பெரும் கவலையளிக்கிறது. ஆகையால் இருநாட்டிலும் நிலவும் பதற்றத்தை தணிக்க இராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாம் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை. அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீதே வான் தாக்குதல் நடத்தினோம்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர்ந்து போரிடுவதை நாம் விரும்பவில்லை.

ஆகையால் இவ்விடயத்தில் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்படுவோம்” என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net